ஜனநாயகன் படத்திற்கு விமர்சனம் : சிக்கலில் மாட்டிய இயக்குனர் அமீர்

இணையத்தில் லீக்கான ஜன நாயகன் படத்துக்கு விமர்சனம் கூறிய இயக்குநர் அமீர் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார்.

நடிகரும் தவெக தலைவருமான விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் சென்சார் சான்றிதழ் பிரச்சனை காரணமாக வெளியாகவில்லை. இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படம் சட்ட விரோதமாக இணையத்தில் வெளியிடப்பட்டது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தப் படத்தினை வெளியிட்டவர் யார் என்பது இதுவரை கண்டுபிடிக்காத நிலையில், இந்தப் படத்தினை பகிரவோ தரவிறக்கம் செய்யவோ கூடாதென படக்குழு வக்கீல் நோட்டீஸ் அளித்திருந்தது.

இந்த நிலையில், இயக்குநர் அமீர் தனது வாட்ஸ் ஆப்பில் இந்தப் படம் குறித்து தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதில், “கசிந்திருக்கும் ’ஜனநாயகன்’ படக் காட்சியிலும் இஸ்லாமியர்கள் தான் தீவிரவாதிகளா? இது தான் தங்களின் அரசியலா? எப்போதுதான் மாறும் இந்த மனநிலை? – அமீர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜன நாயகன் படம் லீக் ஆனதுக்கு சினிமா பிரபலங்கள் கண்டனத்தை முன்வைத்துள்ள நிலையில், இவர் படத்துக்கு விமர்சனம் வைத்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News