டிக்கெட் இல்லாமல் பயணிக்க கூடிய ரயில்

இந்தியாவில் ரயில் பயணம் என்றால் நீண்ட வரிசைகள், டிக்கெட் ஆப் மற்றும் கடைசி நேர பயண பதட்டம் நினைவுக்கு வருகின்றன. ஆனால், டிக்கெட் இல்லாத ஒரு அமைதியான ரயில் சேவை ஒன்று உள்ளது.டிக்கெட்டுகள், அபராதங்கள் அல்லது அறிவிப்புகள் எதுவுமின்றி இயங்கும் இந்த ரயில் சேவையானது பாரம்பரியமாக தொடர்ந்து வருகிறது.

ஆடம்பர அடையாளங்கள் எதுவும் இல்லாமல் மலைகள், நீர்நிலைகள் வழியாகச் செல்லும் இந்த ரயில் செல்லும் வழித்தடங்களில் எஃகு தண்டவாளங்கள் மட்டுமே உள்ளன .இந்த விசித்திரமான ரயில் பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசங்களுக்கு இடையே தினமும் இயங்குகிறது.இந்த ரயிலில் பயணிக்க பயணக் கட்டணம் கிடையாது. டிக்கெட் எடுக்க தேவையில்லை, அபராதமும் இல்லை.

இந்த ரயில் சேவையை ஒரு அரசு அதிகார அமைப்பு இயக்குகிறது.இது ஒரு கலாச்சாரச் சின்னமாகப் பழக்கவழக்கமாக நடத்தப்படுகிறது.இந்த ரயில் பக்ரா-நங்கல் (Bhakra-Nangal) ரயில் என அழைக்கப்படுகிறது. இது 75 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்குகிறது, இந்தியாவில் டிக்கெட் தேவையில்லாத ஒரே ரயிலாக திகழ்கிறது

Related News

Latest News