தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இன்று சிவகங்கை மாவட்டத்தின் கரைக்குடி தொகுதியில் பரப்புரை செய்ய உள்ளார்.
அங்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்பை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக பரப்புரை நடைபெறும் காரைக்குடிக்கு சென்று போது விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்து வந்த இருவர் விபத்தில் சிக்கியுள்ளனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 2 இளைஞர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய், ஒவ்வொரு முறையும் கூட்டத்திற்கு செல்லும்போது, அவரின் வாகனத்தின் பின்னால், பக்கவாட்டில் ரசிகர்கள், தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் வருகின்றனர். இதனால், விபத்துகள் ஏற்படுகின்றன.
தன்னை பின்தொடர வேண்டாம் என விஜய் சொன்ன பிறகும் அதனை கேட்காமல் தொண்டர்கள் தொடர்ந்து ஆபத்தான செயல்களை செய்து வருகின்றனர்.
