ஜனநாயகன் முழு திரைப்படமும் இணையத்தில் வெளியானது : படக்குழு அதிர்ச்சி

நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படம் ‘ஜனநாயகன்’. இந்த படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். பொங்கல் பண்டிகைக்கு முன்பாக படத்தை ரிலீஸ் செய்ய பட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்ட நிலையில் சென்சார் சான்றிதழில் ஏற்பட்ட சிக்கலால் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகவில்லை.

இந்நிலையில், நேற்று மாலை ஜன நாயகன் திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியிடப்பட்டது. இதையடுத்து, இன்று அதிகாலை 3 மணிநேரம் கொண்ட முழு படமும் இணையத்தில் வெளியானதாக கூறப்படுகிறது. இதனால் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இணையத்தில் வெளியான ஜன நாயகன் படத்தை நீக்கும் முயற்சியில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related News

Latest News