தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி, த.வெ.க. என 4 முனை போட்டி நிலவுகிறது.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30-ந்தேதி தொடங்கியது. முதல் நாளில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், இன்று பிற்பகல் 3 மணியளவில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெற உள்ளது. இதில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றாத மனுக்கள் நிராகரிக்கப்படும். உரிய மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
கடைசி நாளான இன்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி சாமி (எடப்பாடி), தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா (விருத்தாசலம்), தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை (ஸ்ரீபெரும்புதூர்) உள்ளிட்ட வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
