‘லீடர்’ படம் 3 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு?

2022ஆம் ஆண்டு வெளியான தி லெஜண்ட் படத்திற்கு பிறகு, தொழிலதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணன், ‘லீடர்’ என்ற புதிய திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார்.

துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இந்த படம், அவர் முன்பு இயக்கிய எதிர்நீச்சல், கொடி, பட்டாசு, கருடன் போன்ற படங்களின் வரிசையில் வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் தயாரித்துள்ளார்.

கடந்த 3ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. லெஜண்ட் சரவணனின் மாறுபட்ட நடிப்பு மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை காரணமாக ‘லீடர்’ படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், ‘லீடர்’ திரைப்படம் உலகளவில் முதல் 3 நாட்களில் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Related News

Latest News