வெயிலுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (திங்கட்கிழமை) முதல் 11-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை சென்டிரல், எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கிண்டி, புரசைவாக்கம், கோயம்பேடு, தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், வடபழனி, ஈக்காட்டுதாங்கல், ஆவடி, அம்பத்தூர், சைதாப்பேட்டை, அண்ணா நகர், மயிலாப்பூர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இதனால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியுள்ளது. இந்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
