புதுச்சேரியில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராஜினாமா

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் கட்சியில் இருந்து விலகுவதாக மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி.க்கு நேற்று இரவு கடிதம் அனுப்பினார்.

சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் நிலவி வரும் நிலையில் முன்னாள் தலைவர் கட்சியில் இருந்து விலகி இருப்பது காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்தவர் ஏ.வி.சுப்பிரமணியன். இவர் 3 முறை புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். கடந்த 2023-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் பொறுப்பில் இருந்து ஏ.வி.சுப்பிரமணியன் நீக்கப்பட்டு வைத்திலிங்கம் எம்.பி. மாநில தலைவராக பொறுப்பேற்றார்.

Related News

Latest News