சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் ஒன்று அளித்திருந்தார். அதில், பேராசிரியர் ஞானவேல் பாபு என்பவர் தனக்கு நீண்டநாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும், செல்போனுக்கு தவறான அர்த்தங்கள் கொண்ட குறுஞ்செய்திகளை அனுப்பி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மாணவியின் இந்தப் புகாரைத் தொடர்ந்து பேராசிரியர் இன்று பல்கலைக்கழகத்தில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், அவர்மீது துறைரீதியான விசாரணைக்கும் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், பேராசிரியர் ஞானவேல்பாபுவை நெல்லையில் வைத்து கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரை நெல்லையில் இருந்து சென்னைக்கு அழைத்து வருகின்றனர்.
