கார் விபத்தில் 30 வயது இளம் நடிகை பரிதாப பலி

ராஜஸ்தானைச் சேர்ந்த நடிகையும் மாடலுமான ஹர்ஷில் காலியா (30) ஜெய்ப்பூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார்.

திங்கட்கிழமை இரவு சுமார் 11:30 மணியளவில், தனது வேலை முடித்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஜெய்ப்பூரின் மான்சரோவர் பகுதியில் உள்ள ஷிப்ரா பாத் சாலையில், ஒரு வளைவில் சென்றுகொண்டிருந்த அவரது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

அதன் தாக்கத்தில் கார் தலைகீழாகக் கவிழ்ந்தது. விபத்து நடந்த சத்தம் கேட்டு அருகிலிருந்த பொதுமக்கள் விரைந்து வந்து காரை நேராக மாற்றி, ஹர்ஷிலை வெளியே எடுத்தனர்.

கடுமையான தலைக்காயங்களுடன் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த விபத்துக்கான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளிவந்துள்ளன. போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

30 வயதான ஹர்ஷில் காலியா, 2021ஆம் ஆண்டு நடைபெற்ற ‘மிஸ் திவா ராஜஸ்தான்’ போட்டியில் முதல் ரன்னர்-அப் பட்டம் பெற்றவர். மேலும், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான ‘க்ரைம் நெக்ஸ்ட் டோர்’ என்ற வெப் தொடர் மூலம் அவர் புகழ் பெற்றார்.

Related News

Latest News