கச்சா எண்ணெய் தட்டுப்பாடு : டீசல் விலை லிட்டருக்கு ரூ.22 அதிகரிப்பு

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக, இன்று ப்ரீமியம் பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூபாயும், தொழிற்சாலைகளுக்கு விற்கப்படும் மொத்த விற்பனை டீசல் லிட்டருக்கு சுமார் 22 ரூபாயும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தொழில்துறை டீசல் விலையை லிட்டருக்கு ரூ.87.67-லிருந்து ரூ.109.59 ஆக உயர்த்தியுள்ளது. இது சுமார் 25% உயர்வு ஆகும். மேலும் தொழில்துறைக்கு பயன்படுத்தப்படும் லைட் டீசல் ஆயில் (LDO) விலையும் லிட்டருக்கு ரூ.22 முதல் ரு.28 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. சாதாரண பெட்ரோல், டீசல் விலையும் எந்த மாற்றமும் இல்லை.

Related News

Latest News