Dhurandhar 2 Box Office: முதல் நாளே இத்தனை கோடி வசூலா?

பாலிவுட் இயக்குநர் ஆதித்ய தார் இயக்கி தயாரித்த படம் துரந்தர். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டு, முதல் பாகம் ஏற்கனவே வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது. இரண்டாவது பாகம் மார்ச் 19ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது.

படம் மொத்தம் 4 மணி நேரம் ஓடக்கூடிய அளவுக்கு மிகப்பெரிய படமாக எடுத்துள்ளார்கள். படம் நான்கு மணி நேரம் ஓடக் கூடிய அளவுக்கு, திரைக்கதை இருக்குமா என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. ஆனால் படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் முதல் நாளில் ரூபாய் 102 கோடிகள் இந்திய அளவில் வசூலித்துள்ளது. விரைவில் உலக அளவிலான வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை படக்குழு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News