அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த படம், பிப்ரவரி 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தில் சிங்கம்புலி, அருள்தாஸ், முனிஷ்காந்த், பால சரவணன் மற்றும் இளவரசு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் உலகம் முழுவதும் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தாய் கிழவி திரைப்படம் Disney+ Hotstar ஓடிடி தளத்தில் வரும் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
