18 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸாகும் ரவி மோகனின் திரைப்படம்

இயக்குநர் ஜீவா இயக்கத்தில் ரவி மோகன் நடிப்பில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தாம் தூம்’. இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார்.

இந்த திரைப்படத்தின் மூலம் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தமிழில் முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத், அரசியல் துறையிலும் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.

18 ஆண்டுகளுக்குப் பிறகு, “தாம் தூம்” படம் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு 5.1 ஆடியோ சவுண்ட் தரத்துடன் மீண்டும் திரைக்கு வர உள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் ரீ-ரிலீஸ் ஆகிறது.

Related News

Latest News