இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் : சமையல் எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இறக்குமதி வரியை 16.5 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது. இதனால், சூரியகாந்தி எண்ணெய், பாமாயில் ஆகியவை லிட்டருக்கு ரூ.10 விலை குறைந்தது.

இந்நிலையில், இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், சமையல் எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் ரூ.155-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் தற்போது ரூ.170 ஆக விலை அதிகரித்துள்ளது.

அதேபோல், ரூ.110-க்கு விற்பனையான ஒரு லிட்டர் பாமாயில் தற்போது ரூ.122 என்ற விலை உயர்ந்துள்ளது. இதுதவிர, கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் விலையும் லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை விலை அதிகரித்துள்ளது.

Related News

Latest News