‘வித் லவ்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் நடிகர்கள் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான வித் லவ் திரைப்படம் கடந்த மாதம் பிப்ரவரி 6ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

வித் லவ் திரைப்படம் உலகளவில் ரூ. 35 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இந்நிலையில், வித் லவ் படத்தின் ஓடிடி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, இப்படம் மார்ச் 6-ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.

Related News

Latest News