பெரம்பலூர் அருகே சென்னை – திருச்சி NH-ல் பஞ்சராகி நின்ற நடிகை தேவி பிரியாவின் காரின் மீது மற்றொரு வாகனம் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. டயரை மாற்றி கொண்டிருக்கும்போது பின்னால் வந்து மோதியதில், காரின் ட்ரைவர் முத்துகணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதில் நடிகை தேவி பிரியா காயமின்றி உயிர் தப்பிய நிலையில், அவரது உதவியாளர் திவாகர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நடிகை தேவி பிரியா விபத்தில் சிக்கிய விஷயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
