நடப்பாண்டு பிப்ரவரி மாதத்தில் ஜிஎஸ்டி மொத்த வசூல் ரூ.1.83 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய 2025ம் ஆண்டு பிப்ரவரியில் வசூலான தொகையுடன் ஒப்பிடுகையில் 8.1 சதவீதம் அதிகம் ஆகும்.
உள்நாட்டுப் பரிவர்த்தனைகள் மூலம் கிடைத்த ஜிஎஸ்டி வருவாய் 5.3 சதவீதம் உயர்ந்து ரூ.1.36 லட்சம் கோடியாக உள்ளது. அதேபோன்று, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வசூல் 17.2 சதவீதம் அதிகரித்து ரூ.47,837 கோடியாக பதிவாகியுள்ளது.
நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் பிப்ரவரி 28 வரையிலான 11 மாத கால மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.20.27 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட 8.3 சதவீதம் அதிகமாகும்.
