பஞ்சாபில் இரண்டு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் உள்ள இரண்டு பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து காவல்துறை, தீயணைப்புப் படை அதிகாரிகள், வெடிகுண்டு அகற்றும் படைகள், மோப்ப நாய் படைகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் பள்ளி வளாகத்திற்கு விரைந்தனர்.

இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்ததது. இதனால் பள்ளியில் சற்று பரபரப்பு காணப்பட்டது.

முன்னதாக கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதியும், பஞ்சாப் சிவில் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News