தமிழகத்தில் வரும் மார்ச் முதல் மே மாதம் வரையிலான கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்றும், வட மாவட்டங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் ‘வெப்ப அலை’ வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
2026-ம் ஆண்டின் கோடை கால வானிலை குறித்த முன்னறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வட தமிழகம் மற்றும் கடலோரத் தமிழகப் பகுதிகளில் இயல்பை விட அதிக நாட்கள் வெப்ப அலை நிலவ வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
