சென்னை நகர மக்களுக்கு முக்கியமான ரயில் போக்குவரத்து வசதியாக வேளச்சேரி – பரங்கிமலை இடையேயான மின்சார ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது.
வேளச்சேரி – பரங்கிமலை இடையே அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளது. வரும் மார்ச் 10 -ம் தேதி முதல் இந்த வழித்தடத்தில் ரெயில் சேவைகள் அதிகாரப்பூர்வமாக இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால் பயணிகளுக்கு நேர சேமிப்பும், சாலை நெரிசல் குறைப்பும் கிடைக்கும் என ரெயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னைவாசிகளின் 15 ஆண்டுகால எதிர்பார்ப்புக்கு தற்போது தேதி குறித்துள்ளது தெற்கு ரெயில்வே.
