ஆந்திராவில் இருந்து அம்பத்தூர் பகுதிக்கு இரண்டு சொகுசு கார்களின் குட்கா கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அம்பத்தூர் உதவி ஆணையர் பிராங்கிளின் ரூபன் அவர்கள் தலைமையிலான தனிப்படை போலீசா அம்பத்தூர் அடுத்த புதூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது இரண்டு சொகுசு கார்களை மடக்கி சோதனை செய்ததில் குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. காரில் இருந்த இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார், காரில் இருந்த 300 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் இரண்டு லட்ச ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் குட்கா பொருட்களை கடத்தி வந்தது தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பொன்ராஜ் மற்றும் அயனம்பாக்கத்தை சார்ந்த கார்த்திக் என்பது தெரிய வந்தது. பின்னர் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
