கேரள மாநிலத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக கேரளம் என மாற்றுமாறு மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை ஜூன் 24, 2024 அன்று கேரள சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றியது.
இந்நிலையில், கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்றும் கேரள அரசின் முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவிருக்கும் கேரள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
