சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (வயது 101) உடல் நலக்குறைவால் காலமானார்.
கடந்த ஆண்டு மே மாதம் 9-ந் தேதி திடீரென நல்ல கண்ணு தனது வீட்டில் தவறி விழுந்தார். இதில் காயம் அடைந்த அவரை குடும்பத்தினர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சைக்கு பின்னர் அவர் மாலையில் வீடு திரும்பினார்.
கடந்த 1-ந் தேதி அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து 20 நாள்களுக்கும் மேலாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்தது. இதனால் இன்று மதியம் 1:55 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
