Tuesday, February 24, 2026

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

தெற்கு ரயில்வே அறிவிப்பின்படி, எழும்பூர் ரயில் நிலையத்தின் நடைமேடை 10 மற்றும் 11-ல் கடந்த 20ஆம் தேதி முதல் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஏப்ரல் 5ஆம் தேதி வரை 45 நாட்கள், புறநகர் ரயில்கள் நடைமேடை 5 மற்றும் 6-ல் இருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயங்கி வந்த 204 மின்சார ரயில் சேவைகள் 164 ஆகக் குறைக்கப்பட்டன. கடந்த நான்கு நாட்களாக இந்த குறைக்கப்பட்ட சேவைகள் அமலில் உள்ளன.

இந்த மாற்றங்களால், சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து தினமும் வேலைக்குச் சென்று வருகிற இலட்சக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக தேர்வு காலம் நடைபெற்று வரும் நிலையில், மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரத்தில் செல்ல முடியாத சிக்கலும் உருவாகியுள்ளது.

மேலும், சிக்னல் தாமதம் காரணமாக புறநகர் ரயில்கள் இடையிடையே நிறுத்தப்படுவதாலும், தாமதமாக இயக்கப்படுவதாலும் பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் மேலும் 49 ரயில் சேவைகள் இன்றுமுதல் குறைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் புறநகர் ரயில்களை நம்பி பயணம் செய்கிற மக்கள் பெரும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்ந்துள்ளனர்.

Related News

Latest News