Tuesday, February 24, 2026

நல்லகண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்ல கண்ணுவின் உடல் நிலை மோசமடைந்துள்ள நிலையில், அவர் இயற்கையுடன் போராடி வருவதாக கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்ல கண்ணு உடல்நிலை பிரச்னை காரணமாக, தீவிர சிகிச்சைக்குப் பிறகு தான் வீடு திரும்பி இருந்தார்.

திடீரென மீண்டும் அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, கடந்த 20 நாட்களாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தற்போதுள்ள சூழலில் அவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்து வருகிறது. மருத்துவர்கள் போராடுகிறார்கள். ஆனாலும், உடல்நிலை மோசமடைந்து கொண்டே இருக்கிறது.

இதுதொடர்பான தகவல்களை குடும்பத்தினருக்கும், கட்சி தலைமைக்கும் அவ்வப்போது தெரிவித்தபடி உள்ளனர். தன் வாழ்நாள் முழுவதும் நாட்டுக்காக போராடியவர், இப்போது இயற்கையுடன் போராடிக் கொண்டிருக்கிறார்” என மனமுடைந்து பேசினார்.

Related News

Latest News