Monday, February 23, 2026

10 ஆண்டுகளில் இத்தனை விருதுகளா? இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்குபவர் சாய் பல்லவி.

சில நாட்களுக்கு முன் நடைபெற்ற பிலிம்ஃபேர் விருது விழாவில், அமரன் திரைப்படத்தில் நடித்ததற்காக சாய் பல்லவிக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. இதன் மூலம், தென்னிந்திய சினிமாவில் இந்த தலைமுறை நடிகைகளில் அதிக ஃபிலிம்பேர் விருதுகள் வென்றவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

முதன் முதலாக பிரேமம் திரைப்படத்திற்காக பிலிம்ஃபேர் விருதை வாங்கிய சாய் பல்லவி, லவ் ஸ்டோரி, ஷ்யாம் சிங்கா ராய், விராத பர்வம், கார்கி, அமரன் என அடுத்தடுத்து சிறந்த நடிகைக்கான விருதை வென்ற அசத்தியுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் 15 திரைப்படங்களில் நடித்துள்ள சாய் பல்லவி, மாநில விருதுகள் உள்ளிட்ட மொத்தம் 32 விருதுகளை இதுவரை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News