நீங்கள் Vodafone Idea (Vi) வாடிக்கையாளராக இருந்து, ரூ.500க்குள் அதிக அன்லிமிடெட் காலிங் மற்றும் டேட்டா நன்மைகள் கொண்ட திட்டத்தைத் தேடுகிறீர்களானால், ரூ.479 திட்டம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம்.
Vi ரூ.479 திட்டத்தின் நன்மைகள்:
இந்த திட்டம் 48 நாட்கள் செல்லுபடியாகும் (Validity) காலத்தை வழங்குகிறது. இந்த 48 நாட்களில், வாடிக்கையாளர்கள் எந்த நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் வொய்ஸ் காலிங் செய்யலாம். மேலும், தினமும் 1GB டேட்டா வழங்கப்படுகிறது. அதேபோல், தினமும் 100 இலவச SMS-களும் கிடைக்கும்.
Vi 5G சேவை கிடைக்கும் பகுதிகளில் இருப்பவர்கள், 5G நெட்வொர்க்கைப் பயன்படுத்தினால் அன்லிமிடெட் 5G டேட்டாவையும் பெற முடியும்.
அதிக டேட்டா தேவையில்லாமல், தினசரி காலிங் வசதி தேவைப்படுவோருக்கும், குறைந்த செலவில் நீண்ட நாட்களுக்கு தங்களது எண்ணை செயல்பாட்டில் வைத்திருக்க விரும்புவோருக்கும் இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும். இரண்டாம் நிலை (Secondary) எண்ணாக Vi சிம் பயன்படுத்துவோருக்கும் இது நல்ல தேர்வாக அமையும்.
Vi ரூ.369 திட்டம்:
Vi-யின் ரூ.369 திட்டம் 56 நாட்கள் சேவை செல்லுபடியாகும் காலத்தை வழங்குகிறது. இந்த காலத்தில், எந்த நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் வொய்ஸ் காலிங் வசதி வழங்கப்படுகிறது. கூடுதலாக, மொத்தம் 600 இலவச SMS-கள் வழங்கப்படுகின்றன.
டேட்டா வசதியாக, இந்த திட்டத்தில் மொத்தம் 4GB டேட்டா வழங்கப்படுகிறது. பயனர்கள் தங்களுக்கு தேவையான நேரத்தில் இந்த டேட்டாவைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
குறைந்த டேட்டா பயன்படுத்துவோர் மற்றும் அதிக காலிங் வசதி தேவைப்படுவோருக்கு இந்த ரூ.369 திட்டமும் ஒரு நல்ல விருப்பமாக இருக்கும்.
