சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் பல எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் காரணமாக எழும்பூர் – ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் சேது விரைவு ரெயில், வரும் 20ம் தேதியில் முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
