Friday, February 13, 2026

பான் கார்டு வைத்திருப்பவர்கள் அலெர்ட்., ஏப்ரல் 1 முதல் முக்கிய மாற்றங்கள்

புதிய வருமான வரி சட்ட வரைவு 2025 மூலம் பான் கார்டு தொடர்பான விதிகளில் முக்கியமான மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரலாம் என கூறப்படுகிறது.

ஏப்ரல் 1 முதல் புதிய சட்டம் அமல்

புதிய பரிந்துரைகளின்படி, ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட பண வைப்பு மற்றும் பணப்பரிவர்த்தனைகளுக்கு மட்டும் பான் கட்டாயமாக்கப்படலாம். தற்போது நிலவும் ரூ.50,000 வரம்பு மாற்றப்பட வாய்ப்புள்ளது.

பண பரிவர்த்தனை விதி

இந்த மாற்றம் சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு சலுகையாக இருக்கும் என கூறப்படுகிறது. ஹோட்டல் அல்லது நிகழ்ச்சி மையங்களில் ரூ.1 லட்சத்திற்குக் குறைவான பில் தொகைக்கு பான் விவரம் தேவையில்லை என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பான் கட்டாயம்

சொத்து வாங்குதல், விற்பனை அல்லது பரிசளிப்பு போன்ற பரிவர்த்தனைகளில் பான் கட்டாய வரம்பை ரூ.20 லட்சமாக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.5 லட்சத்திற்கும் அதிக மதிப்புள்ள இருசக்கர வாகனம் அல்லது பிற வாகனங்களை வாங்கும் போது பான் கட்டாயமாக்கப்படலாம்.

பெரிய பரிவர்த்தனைகள் கண்காணிப்பு

காப்பீட்டு நிறுவனங்களுடன் கணக்கு அடிப்படையிலான உறவைத் தொடங்கும்போதும் பான் அவசியமாகும் என கூறப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் நிர்வாக சிக்கல்களை குறைத்து, பெரிய அளவிலான நிதி பரிவர்த்தனைகளை எளிதில் கண்காணிக்க உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related News

Latest News