Saturday, February 7, 2026

இந்தியாவில் பெயரே இல்லாத விசித்திர ரயில் நிலையம். எங்கே இருக்குன்னு தெரியுமா?

இந்தியாவில் மொத்தம் 7,301 ரயில் நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு ரயில் நிலையத்திற்கும் தனித்த அடையாளமும் பெயரும் உள்ளது. ஆனால், மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சுமார் 18 ஆண்டுகளாக பெயரே இல்லாமல் இயங்கி வரும் ஒரு வினோத ரயில் நிலையம் உள்ளது. இதைக் கேட்டு “என்ன சொல்றீங்க?” என்று தோன்றுவது இயல்பே. ஆனால் இது முழுக்க முழுக்க உண்மை.

இந்த பெயர் இல்லாத ரயில் நிலையம், மேற்கு வங்கத்தின் பர்த்வான் நகரத்திலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பான்குரா – மசாகிராம் ரயில் பாதையில் இருக்கும் இந்த நிலையம் 2008ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை அந்த நிலையத்தின் பிளாட்பாரங்களில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகள் அனைத்தும் எழுத்தே இல்லாமல், வெறும் மஞ்சள் நிற பலகைகளாகவே காட்சியளிக்கின்றன.

இந்த விசித்திர நிலைக்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கிராமப் பஞ்சாயத்து உள்ளது. இந்த ரயில் நிலையம் ரெய்னாகர் (Rainagar) மற்றும் ராய்நகர் (Raina) என்ற இரண்டு கிராமங்களுக்கு நடுவே அமைந்துள்ளது. நிலையம் கட்டப்பட்டபோது, “நிலையத்துக்கு எங்கள் கிராமத்தின் பெயர்தான் வைக்க வேண்டும்” என்று இரு கிராம மக்களும் உரிமை கோரினர்.

தொடக்கத்தில் இந்த ரயில் நிலையத்திற்கு ‘ரெய்னாகர்’ என்று பெயரிடப்பட்டது. ஆனால் அதற்கு ராய்நகர் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் காரணமாக அந்தப் பெயர் நீக்கப்பட்டது. காலப்போக்கில் இந்த விவகாரம் பெரிதாகி நீதிமன்றம் வரை சென்று வழக்கு நிலுவையில் உள்ளது. சட்ட சிக்கல்களையும், கிராம மக்களின் எதிர்ப்பையும் தவிர்க்கும் நோக்கில், ரயில்வே நிர்வாகம் பெயர் பலகைகளை அப்படியே காலியாகவே விட்டுவிட்டது.

பெயரே இல்லாவிட்டாலும், இந்த ரயில் நிலையம் மிகவும் பரபரப்பாக இயங்கி வருகிறது. தினமும் சுமார் 6 ரயில்கள் இந்த நிலையத்தில் நின்று செல்கின்றன. ஆயிரக்கணக்கான பயணிகளும், சரக்கு போக்குவரத்தும் எந்த தடையுமின்றி நடைபெற்று வருகிறது.

Related News

Latest News