Wednesday, February 4, 2026

மணிப்​பூரில் அமலில் இருந்த குடியரசு தலைவர் ஆட்சி வாபஸ்

மணிப்​பூரில் கடந்த 2023 மே மாதம் மைதே​யி, குகி சமூகத்தினர் இடையே இனக் கலவரம் மூண்​டது. இதில் 260 பேர் உயி​ரிழந்​தனர். ஆயிரக்​கணக்​கானோர் இடம் பெயர்ந்​தனர். பல மாதங்​களாக வன்​முறை நீடித்​த​தால் கடந்த 2025 பிப்​ர​வரி​யில் பாஜகவை சேர்ந்த முதல்​வர் பிரேன் சிங் பதவி வில​கி​னார்.

இந்​நிலை​யில் டெல்​லி​யில் உள்ள பாஜக தலை​மையகத்தில் மணிப்​பூர் பாஜக எம்​எல்​ஏக்​கள் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. இதையடுத்து அம்​மாநிலத்​தின் புதிய முதல்​வ​ராக பாஜகவின் யும்​நம் கேம்​சந்த் சிங் பதவி​யேற்க உள்​ளார். இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் அமலில் இருந்த குடியரசு தலைவர் ஆட்சி வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Related News

Latest News