Wednesday, February 4, 2026

கிருஷ்ணகிரி அருகே, 15 ஆண்டுகளுக்குப் பின் நியாய விலைக் கடை – மக்கள் மகிழ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டம், காட்டுக்கொல்லை கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளாக நியாய விலைக் கடை இல்லாததால், பொதுமக்கள் அவதி அடைந்தனர். இந்த நிலையில், பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மதியழகனிடம் இரண்டு மாதங்களுக்கு முன்பு கிராம மக்கள் நியாய விலைக் கடை அமைக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர், நடவடிக்கை எடுத்து, காட்டுக்கொல்லை கிராமத்தில் புதிய நியாய விலைக் கடையை அமைத்து, இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மேலும், நிகழ்ச்சியின் போது தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு குடியிருப்பதற்கு வீடு இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக மனு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் உடனடியாக தூய்மை பணியாளர்களுக்கு வீடு ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Related News

Latest News