Monday, February 2, 2026

மத்திய பட்ஜெட் 2026 – கவனம் ஈர்த்த முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இது அவரது தொடர்ச்சியான ஒன்பதாவது பட்ஜெட் உரையாகும். இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய அறிவிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய தேசிய நீர்வழித்தடங்கள் உருவாக்கப்படும்; இதற்காக ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கீடு.

மகாத்மா காந்தி பெயரில் காதியை மேம்படுத்த புதிய திட்டம்.

நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் வகையில் புதிய தொழில் வழித்தடங்கள் அமைக்கப்படும்.

விளையாட்டு உபகரணங்கள் உற்பத்திக்கு புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

அரியவகை கனிமம் எடுப்பதற்கான புதிய திட்டம் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசாவுக்கு அறிமுகம் .

பிரத்யேக ரசாயன பூங்காக்கள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அமைக்கப்படும்.

செமிகண்டக்டர் உற்பத்திக்கு 2.O திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

உயிரி மருத்துவத்திற்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு.

ஜவுளித்துறையை மேம்படுத்த சமர்த் 2.O திட்டம்.

நாடு முழுவதும் 7 வழித்தடங்களில் அதிவேக ரயில் சேவை.

பொதுப்போக்குவரத்திற்கு நாடு முழுவதும் 20 நீர்வழித்தடங்கள்.

குறு, சிறு தொழில் வளர்ச்சிக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு.

மும்பை – பூனே, ஐதராபாத் – சென்னை, புனே – ஐதராபாத் இடையே அதிவிரைவு ரயில் தடங்கள் உருவாக்கப்படும்.

சர்வதேச அளவில் ஜவுளித்துறையில் இந்தியா போட்டிபோட புதிய திட்டங்கள்.

ஜவுளித்துறை சார்ந்த திறன்களை வளர்த்தெடுக்க, தொழிற்துறை, கல்வித்துறை இடையே ஒருங்கிணைப்பு.

இயற்கை நூல் உற்பத்திக்கு புதிய திட்டம்; பருத்தி, பட்டு கம்பளி நூல் உற்பத்திக்கு திட்டம்.

புதிய மெகா ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும்.

பொதிகை மலையில் சுற்றுச்சுழலுக்கு உகந்த மலையேற்ற திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

உலக சுகாதார நிறுவனத்தின் பாரம்பரிய மருந்துகள் ஆராய்ச்சி மையம் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் அமைக்கப்படும்.

3 புதிய ஆயுர்வேத கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்படும்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இனி இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம்.

மாவட்டந்தோறும் மாணவிகளுக்கான விடுதிகள் அமைக்கப்படும்.

இந்தியவில் அந்நிய முதலீடுகளை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள். 10 சதவீதம் ஆக உள்ள முதலீடு வரம்பு, 24 சதவீதம் ஆக அதிகரிக்கப்படுகிறது.

Related News

Latest News