கேரள மாநிலம், கோழிக்கோட்டை சேர்ந்த தீபக் (42), ஒரு ஜவுளி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று, கேஎஸ்ஆர்டிசி பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது தீபக்குடன் அதே பேருந்தில் பயணம் செய்த ஷிம்ஜிதா என்ற பெண், சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.
அந்த வீடியோவில், தீபக் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக ஷிம்ஜிதா குற்றம்சாட்டினார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து கடுமையான மன உளைச்சலில் இருந்த தீபக் கடந்த ஞாயிறு அன்று தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஷிம்ஜிதாவை போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில் கேரளாவில் சில ஆண்கள், தங்களின் உடலை அட்டைப்பெட்டியால் மறைத்தபடி பேருந்துகளில் பயணம் செய்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவுகிறது. அந்த வீடியோவில் பயணி ஒருவர் கூண்டு போன்று இருக்கும் அட்டை பெட்டிக்குள் நின்ற படி பேருந்தில் பயணம் செய்கிறார். அந்த அட்டையில் ஆண்கள் ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்ற வாசகத்தையும் எழுதியிருந்தார்.
