உணவு சாப்பிடும் நேரத்தில் நட்ஸ் சாப்பிடலாமா? எப்போது சாப்பிட்டால் நல்லது?

பாதாம், பிஸ்தா, வால்நட் போன்ற நட்ஸ் வகைகளில் புரதச்சத்து மற்றும் நல்ல கொழுப்பு அதிகமாக உள்ளது. இதனால் இதய நோய்களைத் தடுப்பதற்கும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதற்கும், உடலுக்கு தேவையான ஆற்றலைப் பெறுவதற்கும் நட்ஸ் உதவுகின்றன.

நட்ஸ் சாப்பிட வேண்டும் என்பதை பலர் அறிந்தாலும், எவ்வளவு அளவில் சாப்பிட வேண்டும் என்பதில் பலர் கவனம் செலுத்துவதில்லை. தினமும் 100 கிராம் முதல் கால் கிலோ வரை கூட சிலர் நட்ஸ் சாப்பிடுகிறார்கள். இது தவறான பழக்கமாகும், ஏனெனில் நட்ஸ் கலோரி அதிகம் கொண்ட உணவுப் பொருட்களாகும்.

ஒரே வகை நட்ஸை மட்டும் 20 கிராம் சாப்பிடாமல், பல வகை நட்ஸ்களை கலந்து தினமும் 20 கிராம் அளவில் சாப்பிட்டால், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் சமநிலையாகக் கிடைக்கும்.

நட்ஸ் சாப்பிடும் நேரமும் முக்கியமானதாகும். உணவு சாப்பிடும் போது, சாப்பிட்டு முடித்தவுடன் அல்லது உணவுக்கு முன்பாக உடனடியாக நட்ஸ் சாப்பிட வேண்டாம். ஒரு உணவு வேளைக்கும் அடுத்த உணவு வேளைக்கும் இடையில், உணவு எடுத்துக்கொண்ட இரண்டு மணி நேரத்துக்குப் பிறகும், அடுத்த உணவுக்கு இரண்டு மணி நேரம் முன்பும் நட்ஸ் சாப்பிடலாம். உதாரணமாக, ஒருவர் காலை 8 மணிக்கு காலை உணவும், மதியம் 1 மணிக்கு மதிய உணவும் எடுத்துக்கொள்வாரானால், காலை 10 முதல் 11 மணி வரை நட்ஸ் சாப்பிடுவது உடலுக்கு ஏற்றதாக இருக்கும்.

எதை எவ்வளவு சாப்பிட வேண்டும்?

பாதாம் – 4 முதல் 7 (எண்ணிக்கையில்)

வால்நட் – 3 முதல் 5 (எண்ணிக்கையில்)

பேரீச்சை – 1 -2 (நடுத்தர சைஸ்)

பிஸ்தா – அதிகபட்சம் 10 கிராம்.

உலர் திராட்சை – 10 (எண்ணிக்கையில்)

முந்திரி – 5 முதல் 7 (எண்ணிக்கையில்)

அப்ரிகாட் – 3 முதல் 5 (எண்ணிக்கையில்)

உலர் அத்தி – இரண்டு

Related News

Latest News