தமிழகத்தில் இரண்டு அடுக்கு (டபுள் டக்கர்) பஸ் சேவை கடந்த 1970 ஆண்டு முதல் இருந்து வந்தது. இந்த சேவை 2007 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த சேவையை கொண்டு வர தமிழக அரசு ஆர்வம் காட்டியது. இதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், முதல் கட்டமாக அசோக் லேலண்ட் நிறுவனத்திடம் இருந்து 20 பஸ்களை வாங்க திட்டமிட்டு அதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மீண்டும் டபுள் டக்கர் பேருந்து சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த டபுள்டெக்கர் பேருந்து சேவை 3 வழித்தடங்களில் இயக்கப்படுகிறது.
வழித்தடம் 102: பிராட்வே – சிறுசேரி (ஓ.எம்.ஆர் வழித்தடம்)
வழித்தடம் ஏ1: எழும்பூர் – திருவான்மியூர் (சுற்றுலா வழித்தடம்)
ஈசிஆர் சாலை: மெரினா கடற்கரை முதல் மாமல்லபுரம் வரை
18 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இது பொதுமக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
