அமித்ஷா அலுவலகத்துக்கு வெளியே திரிணமூல் எம்பிக்கள் போராட்டம்! குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸ்!

நிலக்கரி ஊழல் வழக்கில் ஐ-பேக் நிறுவனத் தலைவா் பிரதிக் ஜெயினின் வீடு மற்றும் அந்த நிறுவனத்தின் அலுவலகங்களில் அமலாக்கத் துறை வியாழக்கிழமை காலை முதல் சோதனை நடத்தியது. பிரதிக் ஜெயின் திரிணமூல் காங்கிரஸ் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் பொறுப்பாளராகவும் உள்ளாா். தலைநகா் டெல்லி உள்பட மொத்தம் 10 இடங்களிலும் இந்தச் சோதனை நடைபெற்றது.

அரசியல் காரணங்களுக்காக அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டை முன்வைத்து, டெல்லியில் உள்ள அமித் ஷா அலுவலகத்துக்கு வெளியே திரிணாமூல் காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, காவல்துறை அறிவுறுத்தியும் அவர்கள் கலைந்து செல்லாததால், திரிணமூல் காங்கிரஸ் எம்பிக்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைத்து எம்பிக்களையும் நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related News

Latest News