பெண் காவலரை அவமதித்த நபருக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம்

சத்தீஸ்கரில் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தின்போது பெண் காவலரை அவமதித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவருக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்று பெண் காவலர்கள் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் பகுதியில் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி சுரங்கப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. 300க்கும் அதிகமானோர் கூடியதால், அப்பகுதியில் காவலர்கள் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், அப்பகுதியில் பாதுகாப்புக்காக இருந்த பெண் காவலரை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர், தாக்கியதோடு, வவரின் சீருடையையும் கிழித்து அவதூறாகப் பேசி விரட்டியடித்தாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் தொடர்புடையதாக 5 பேரை காவல் துறை கைது செய்துள்ளது.

இந்நிலையில், முக்கிய குற்றவாளியேன கூறப்படும் சித்ரசென் சாஹு என்பவரை பெண் காவலர்கள் செருப்பு மாலை அணிவித்து மக்கள் மத்தியில் ஊர்வலமாக அழைத்துச் சென்று, பிறகு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

Related News

Latest News