காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுரேஷ் கல்மாடி காலமானார். அவருக்கு வயது 81.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான சுரேஷ் கல்மாடி இன்று காலமானார். வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த சில நாட்களாக புனேவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். சுரேஷ் கல்மாடியின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
1991 – 1995ம் ஆண்டு நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் ரயில்வே இணை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் சுரேஷ் கல்மாடி. இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராகவும் அவர் இருந்துள்ளார். பின்னர் 2010 -ம்ஆண்டு காமன்வெல்த் முறைகேட்டில் சிக்கி சிறை சென்றார்.
