விஜய் கட்சியான தவெகவில் இருந்த நடிகர் தாடி பாலாஜி, அக்கட்சியில் இருந்து விலகி நேற்று லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்தார்.
லாட்டரி அதிபர் மார்டின் மகன் ஜோஸ் சார்லஸ் புதுச்சேரியில் ஜேசிஎம் அமைப்பு தொடங்கி நடத்தி வந்தார். அவர் கடந்த வாரம் லட்சிய ஜனநாயக கட்சியை தொடங்கினார்.
‘விஜய் உடன் இருப்போர் சரியில்லை, அவரை வழிநடத்துவோர் சரியில்லை, விஜய்யுடன் கூட்டணி குறித்து சிந்திக்க வேண்டும்’ என்று ஜோஸ் சார்லஸ் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், நடிகர் தாடி பாலாஜி இந்த கட்சியில் இணைந்துள்ளார்.
