Thursday, February 5, 2026

எடப்பாடி பழனிசாமியை விட விஜய்தான் தற்போது கலக்குகிறார் – புகழேந்தி பேட்டி

எடப்பாடி பழனிசாமியை விட விஜய்தான் தற்போது கலக்குகிறார் என்று அதிமுக ஒருங்கிணைப்பு குழுவின் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் என 66 முக்கிய நபர்கள் வெளியே சென்று விட்டதாக கூறினார்.

தற்போதைய கருத்துக் கணிப்பில் அதிமுகவை விட திமுகவும், த.வெ.க-வும் முன்னிலையில் இருப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்த புகழேந்தி, எடப்பாடி பழனிசாமி ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறவில்லை என்றும் அவரின் ஆர்ப்பாட்டங்கள் பொதுக்கூட்டங்கள் ஊர்வலங்கள் என அனைத்தும் வீணாகி விட்டதாகவும் தெரிவித்தார். எதிர்வரும் தேர்தலில் திமுக-வுக்கும் தவெக-வுக்கும் தான் போட்டி என்று புகழேந்தி கூறினார்.

Related News

Latest News