நாடு முழுவதும் இயங்கும் ரயில்களில் டிக்கெட் இன்றி பயணிப்போர் மற்றும் முறைகேடாக பயணம் மேற்கொள்வோருக்கு ரயில்வே நிர்வாகம் அபராதம் விதித்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தெற்கு ரயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட சேலம் ரயில்வே கோட்டத்தில் கோட்ட மேலாளர் உத்தரவின் பேரில் பல்வேறு சோதனைகள் மேற்கொண்டு அபராதம் விதித்து வருகின்றனர்.
சேலம் கோட்டப்பகுதியில் இயங்கும் ரயில்களில் கடந்த மாதம் நவம்பரில் நடத்தப்பட்ட சோதனையில், டிக்கெட் இன்றியும் முன்பதிவு இல்லா டிக்கெட் வைத்துக் கொண்டு முன்பதிவு பட்டியில் முறைகேடாகவும் அதிகப்படியான லக்கேஜ் வைத்துக் கொண்டு பயணித்த 16,577 பேர் சிக்கினர். இவர்களிடம் இருந்து ரூ.1.47 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்படும் ரயிலில் பயணிக்கும் பயணிகள் முறையான டிக்கெட் எடுத்துக்கொண்டு அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் தான் செல்ல வேண்டும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
