இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் காரணமாக பலர் உடல் எடை குறைய உடற்பயிற்சி கூடங்களை நோக்கி வருகிறார்கள். இந்நிலையில் சீனாவில் ஒரு ஜிம் நிர்வாகம் மூன்று மாதங்களில் 50 கிலோ எடையை குறைக்கும் சவாலை தொடங்கி உள்ளது. அதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள Porsche கார் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இதில் பங்கேற்பதற்கான கட்டணம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரமாகும், மேலும் உணவு மற்றும் தங்கும் வசதிகளை ஜிம் நிர்வாகமே வழங்குகிறது. இந்த அறிவிப்பால் பலர் ஆச்சரியத்தில் உள்ளனர். ஆனால் மருத்துவர்கள் இந்த விதமான எடைக்குறைப்பு உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
எனவே, உடலை எடை குறைப்பதும், உடல்நலத்தை பாதுகாப்பதும் முக்கியம். இந்த மாதிரியான அதிக பரிசு சவால்கள் லாப நோக்கத்திற்காக நடக்கிறது என்று சமூக வலைதளங்களில் விவாதமும் எழுந்துள்ளது.
