தங்கம் மற்றும் வெள்ளி நகை கடன்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி ஆஃப் இந்தியா (RBI) வெளியிட்டுள்ளது. இதன் மூலம் கடன் திருப்பிச் செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் தங்களின் நகைகளை உடனடியாக திருப்பித் தருவது கட்டாயமாகிறது.
தாமதம் செய்தால் ரூ.5,000 அபராதம்!
வாடிக்கையாளர் தங்கம் அல்லது வெள்ளி நகை கடனை முழுமையாக செலுத்தியவுடன், வங்கிகள் அந்த நகைகளை உடனடியாக திருப்பித் தர வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டால், ஒரு நாளுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
LTV விகிதத்தில் மாற்றம்
தங்க நகை கடன்களுக்கு உள்ள Loan-to-Value (LTV) விகிதம் ரூ.2.5 லட்சம் வரை உள்ள கடன்களுக்கு 75% இலிருந்து 85% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, வாடிக்கையாளர்கள் தற்போது தங்கத்தின் மதிப்பின் 85% வரை கடனாக பெறலாம்.
எதை அடகு வைக்கலாம்?
புதிய விதிகளின்படி, தங்கக் கட்டிகள் அல்லது வெள்ளிக் கட்டிகளை கடனுக்காக அடகு வைக்க முடியாது.
அதற்கு பதிலாக, தங்க, வெள்ளி நகைகள், விளக்குகள், பாத்திரங்கள் போன்ற பொருட்களை மட்டுமே அடகு வைக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அடகு வரம்புகள்
தங்க நகைகள்: அதிகபட்சம் 1 கிலோ, தங்க நாணயங்கள்: அதிகபட்சம் 50 கிராம், வெள்ளி நகைகள்: அதிகபட்சம் 10 கிலோ.
எப்போது அமலுக்கு வரும்?
இந்த புதிய வழிகாட்டுதல்கள் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும். அனைத்து வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் NBFCக்கள் இந்த விதிகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
