ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா இமாலய வெற்றி!!

இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்னி மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இந்த நிலையில், வழக்கம் போல் இந்த போட்டியிலும் இந்தியா டாஸ்ஸில் தோல்வியைத் தழுவியது. அதாவது, இந்திய அணி தொடர்ச்சியாக 18வது முறையாக டாஸ்- கில் தோற்ற போட்டியாகும்..

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது ஆஸ்திரேலியா அணி. இந்த நிலையில் இறுதியில் 46.4 ஓவர் முடிவில் அந்த அணி 236 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் இழந்தது.

இதனைத் தொடர்ந்து 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. ரோகித் ஷர்மா, கேப்டன் சுப்மன் கில் இந்திய அணியின் ரன் கணக்கைத் தொடங்கினர். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் சுப்மன் கில் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித், விராட் இணை இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. இருவரின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

Related News

Latest News