தீபாவளி பண்டிகை எதிரொலியாக UPI பேமென்ட்களில் வரலாறு காணாத அளவு அதிக எண்ணிக்கையிலான பணப்பரிமாற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த அக்டோபர் மாதத்தில் தினசரி பணப்பரிமாற்ற மதிப்பு 13 சதவீதம் உயர்ந்து 94,000 கோடி ரூபாயை அடைந்து இருக்கிறது என நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
தீபாவளி அன்று ஒரே நாளில் 740 மில்லியன் பணப் பரிமாற்றங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தீபாவளி காரணமாக செய்யப்பட்ட செலவுகள் மற்றும் சமீபத்தில் நடைபெற்ற GST விகித குறைப்பு போன்றவை இதற்கு காரணமாக அமைந்துள்ளது.
இது செப்டம்பர் மாதத்தில் 654 மில்லியனாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலமாக இந்த மாதம் 6 சதவீதம் அதிகரிப்பு நடைபெற்று இருக்கிறது.
