பாஸ்போர்ட்டே இல்லாமல் உலகத்தையே சுற்றலாம்! இந்த மூன்று பேருக்கு மட்டும் தான் அந்த உரிமை!

வெளிநாடு பயணம் என்ற உடன், ‘பாஸ்போர்ட் எடுத்தாச்சா? அச்சோ… renew பண்ணனுமே போன்ற பரபரப்புகள் நம் மூளைக்குள் தொற்றிக்கொள்ளும்.

ஏனென்றால், பாஸ்போர்ட் என்பது ஒவ்வொரு நாட்டின் குடிமக்களும் வெளிநாடு செல்ல அவசியம் பெற வேண்டிய அடையாள ஆவணம். ஆனால் உலகில் மூன்று பேருக்கு மட்டும் இந்த விதி பொருந்தாது. யார் அவர்கள்? நீங்கள் யூகித்ததை போல அது, உலகையே அதிரவிடும் டிரம்ப் அல்ல…  அப்படியென்றால் ரஷ்ய அதிபரா? அவரும் இல்லை. உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க்கா? இல்லை. அப்படியென்றால் நம் நாட்டின் பிரதமர் மோடி அவர்களா? அவரும் இல்லை.

சரி suspense போதும். அவர்கள் யார் என்று பார்க்கலாம் வாங்க. ஜப்பான் மன்னர் மற்றும் மகாராணி, மற்றும் பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ். இவர்கள் உலகின் எந்த ஒரு நாட்டுக்கும் பாஸ்போர்ட் இல்லாமல் பறக்கலாம்.

இவர்கள் தங்கள் நாடுகளின் மாநிலத் தலைவர்கள் அதாவது Heads of State என்பதால், பாஸ்போர்ட் இல்லாமலேயே உலகின் எந்த நாட்டிற்கும் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். ஜப்பான் வெளிநாட்டு அமைச்சகம் வெளியிட்ட விதிமுறையின்படி, மன்னர் மற்றும் மகாராணிக்கு பாஸ்போர்ட் வழங்குவது மரியாதை குறைவாக கருதப்படுகிறது. அதன் பதிலாக, அவர்கள் வெளிநாடு செல்லும்போது, ஜப்பான் அரசு அந்த நாட்டுக்கு ஒரு அதிகாரப்பூர்வ கடிதம் அதாவது Diplomatic Note அனுப்புகிறது. அதில், மன்னர் தம்பதியரை அந்நாட்டில் அனுமதிக்குமாறு கோரப்படுகிறது.

இங்கிலாந்து மன்னருக்கு வேறுவித நடைமுறையுள்ளது. மன்னர் பெயரில் பிற குடிமக்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படும் நிலையில், மன்னருக்கே பாஸ்போர்ட் தேவையில்லை. அவருக்கு அரசின் சார்பில் ஒரு அதிகார ஆவணம் வழங்கப்படுகிறது. அதில், “மன்னர் எங்கு சென்றாலும், அவருக்கு முழு அனுமதி வழங்கப்பட வேண்டும்” என்று குறிப்பிடப்படும்.

சரி யார் அந்த மூன்றாவது VIP? அவர் தான் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர். அதாவது UN Secretary-General. “laissez-passer” எனப்படும் சிறப்பு பயண ஆவணத்தை அவர் பெற்றிருப்பதாக குறிப்பிடப்படுகிறது. இது ஐக்கிய நாடுகள் சபையால் வழங்கப்படும் ஒரு வகை சர்வதேச பயண ஆவணமாகும். இந்த “laissez-passer” ஆவணம் உண்மையில் பாஸ்போர்ட்டிற்கு இணையான ஆவணமாக இருந்தாலும் அவர்கள் பிற நாடுகளுக்குச் செல்லும் போது விசா பெற வேண்டிய அவசியம் உள்ளது.

இந்த சிறப்பு உரிமை, அவர்களின் உயர்ந்த அரசியல் அந்தஸ்தைக் காட்டும் அடையாளமாக இருக்கிறது. உலகம் முழுவதும் பலருக்கு பாஸ்போர்ட் இன்றி பயணம் சாத்தியமில்லை. ஆனால் இவர்கள் மட்டும் அதற்கு விதிவிலக்கானவர்கள் – வரலாற்று மரபின் சின்னங்களாக விளங்குபவர்கள் இவர்கள்.

Related News

Latest News