தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை : இன்றைய விலை நிலவரம் என்ன?

தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,680 அதிரடியாக சரிந்து, ஒரு சவரன் ரூ.92,320 க்கும் விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.160 குறைந்து ஒரு கிராம் ரூ.11,540 க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,500-க்கும் சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.92,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 174 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்துக்கு 74 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News