நடிகர் விஷாலின் 35ஆவது படமான ‘மகுடம்’ படத்தை ஈட்டி மற்றும் ஐங்கரன் படங்களை இயக்கிய ரவி அரசு இயக்கி வந்தார். ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம் இப்படத்தை தயாரிக்கிறது. ஜி.வி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்நிலையில், ரவி அரசு உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகுடம் படத்திலிருந்து ரவி அரசு விலகிய நிலையில், இப்படத்தை நடிகர் விஷால் இயக்கி வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
